Posts

Showing posts from January, 2020

முதல் மாணவி

Image
முதல் மாணவி  அ ந்த பள்ளியின் ஆண்டுவிழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆடல் பாடல் மற்றும் பல்வேறு திறமைகளை மாணவர்கள்  ஒரு கலைவிழாவாக நடத்திக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் கலைவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிக்கொண்டிருந்தார்கள். பெற்றோர்களும் இதர மாணவர்களும் ஆண்டு விழாவைப் பார்த்து வெகுவாக பாராட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.      அப்பொழுதுதான் பள்ளியின் முதல்வர் மாணவி நந்தினியை மேடைக்கு வருமாறு அன்போடு அழைத்தார். “வினாடி வினா போட்டியிலும் யோகாப் போட்டியிலும் நமது பள்ளி மாணவி நந்தினி முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர்களுக்கு நமது பள்ளியின் சார்பாக முதல் பரிசு வழங்கப்படுகிறது” என்று அறிவித்தார். மேடைக்கு வந்த நந்தினிக்கு பரிசை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார் முதல்வர்.      சரி! “நீ எப்படி முதல் இடத்திற்கு வந்தாய் என்பதை நமது பள்ளியின் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்” என்றார் முதல்வர்.      அனைவரது கவனமும் மாணவி நந்தினியை நோக்கியே இருந்தது. பள்ளியின் முதல்வரை வ...

கரும்பலகைக் கதைகள் குழந்தைகளுக்கான புத்தகம்

Image
            குழந்தைகளுக்கான புத்தகம்          புதுச்சேரி அன்பழகன் ஒரு பொறியாளர். குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி ஓர் ஆசிரியராக ஆச்சரியப்படுத்துகிறார்.  இந்தப் புத்தகத்தில் மொத்தம் பதினேழு குட்டிக்கதைகள் உள்ளன. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்தான் கதையின் நாயகர்கள்.        தொண்ணூற்றி ஒன்பது  அ றுபத்தியாறு என நாம் திரும்பத் திரும்பச் சொன்னால் நமது நுரையீரல் நலமடைகிறது என்பது முதல் பதிமூன்று எனும் எண் மதவாதிகளால் ஆபத்தானதாகியது, பூச்சியத்தின் ஆற்றல் என விரிந்து ராபர்ட்ஸ்காட், அமுன்சென் என அறிவியல் பிறவிகளும் எடுக்கின்றன இவரது  குட்டிக்கதைகள்     உப்பு பற்றிய உரையாடலை நான் மிகவும் ரசித்தேன். மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினமும் மனதைக் கவர்ந்தது.    மதிப்பெண் போட்டியில் மழலைகளின் உள்ளத்து அழுகுரல் ஏன் கேட்பதில்லை என வினவும் அந்த பள்ளியைத் தொலைத்துவிட்டேன் கதை  என மிகச்சிறப்பான கதைகளை குழந்தைகளுக்காய் தந்திருக்கிறார்.     ...